தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச.12) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
ஒரு சவரன் தங்கம் நேற்று (டிச.11) ரூ.96,400க்கு விற்பனையான நிலையில், இன்றும் ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.12,250க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.160 மட்டுமே உயர்ந்த நிலையில், இன்று ரூ.1,600 உயர்ந்துள்ளது.
இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15உயர்ந்து ரூ.215 ஆகவும் ஒரு கிலோ ரூ.15,000 உயர்ந்து ரூ,2,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.