ஸ்குவாஷ் முதல் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரை: ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப்

ஸ்குவாஷ் முதல் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரை: ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப்

அமெரிக்​கா​வில் நடை​பெற்று வரும் ஸ்கு​வாஷ் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை அனஹத் சிங் தோல்வி கண்டார்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நேற்று நடைபெற்ற ஸ்பி​ராட் சாம்​பியன்ஸ் ஸ்கு​வாஷ் போட்டியின் 2-வது சுற்​றில் இந்​திய வீராங்​கனை அனஹத் சிங்​கும், ஜப்​பானின் சடோமி வத்​த​னாபே​வும் மோதினர். இதில் வத்​த​னாபே 6-11, 6-11, 11-2, 11-8, 11-6 என்ற செட் கணக்​கில் அனஹத் சிங்கை வென்றார்.

ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ்: மாயா, அர்​னவ் தோல்வி - ஆஸ்​திரேலிய ஓபன் ஜூனியர் கிராண்ட்​ஸ்​லாம் போட்​டி​யில் இந்​தி​யா​வின் மாயா ராஜேஷ்வரன் ரேவ​தி, அர்​னவ் பாப்​பர்​கர் ஆகியோர் தோல்​வியடைந்து வெளியேறி​னர்.

மெல்​பர்​னில் நேற்று நடை​பெற்ற மகளிர் ஜூனியர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றுப் போட்​டி​யில் மாயா ராஜேஷ்வரன் ரேவதி 4-6, 1-6 என்ற நேர் செட்​களில் ரஷ்​யா​வின் அன்னா புஷ்கரே​வா விடம் தோல்வி கண்டு வெளி​யேறி​னார். ஆடவர் பிரிவு முதல் சுற்​றில் அர்​னவ் 3-6, 4-6 என்ற கணக்​கில் அமெரிக்க வீரர் விஹான் ரெட்​டி​யிடம் வீழ்ந்​தார்.

இந்​திய மகளிர் கால்​பந்து அணி பயிற்​சி​யாள​ராக பமீலா நியமனம்: 17 வயதுக்​குட்​பட்​டோருக்​கான இந்​திய மகளிர் கால்​பந்து அணிக்கு முன்​னாள் இத்​தாலி அணி வீராங்​கனை பமீலா கான்டி பயிற்​சி​யாள​ராக நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

இதுகுறித்து அகில இந்​திய கால்​பந்து சம்​மேளனம் (ஏஐஎப்​எப்) வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: 17 வயதுக்​குட்​பட்​டோருக்​கான இந்​திய அணி ஏஎப்சி ஆசி​யக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யில் பங்​கேற்​க​வுள்​ளது. அந்​தப் போட்​டிக்கு முன்​ன​தாக பமீலா கான்டி இந்​திய அணி​யினருடன் இணை​வார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

ரஞ்சி கிரிக்கெட் போட்டி: தமிழ்நாடு அணி வெற்றி - ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 207 ரன்கள் வித்தியாசத்தில் ஒடிசா அணியை வென்றது. புவனேஸ்வரில் உள்ள கேஐஐடி மைதானத்தில் இந்த ஆட்டம் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 286 ரன்களும், ஒடிசா அணி 148 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.

2-வது இன்னிங்ஸில் தமிழக அணி 316 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 455 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஒடிசா அணி 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தின்போது அந்த அணி 83.5 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் சுப்ரான்ஷு சேனாபதி 98, அனில் பரிதா 98 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து தமிழக அணி 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக தமிழக வீரர் சோனு யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

பாரா டேபிள் டென்னிஸ்: பவீனாபென் சாம்பியன் - 3-வது தேசிய பாரா ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் பவீனாபென் ஹஸ்முக்பாய் படேல் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி சென்னை ஐஐடி-யில் நேற்று முன்தினம் தொடங்கியது.

2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 220 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து 62 பேர் பங்கேற்றுள்ளனர். மெட்ராஸ் பட்டணம் ரோட்டரி கிளப், சென்னை ஐஐடி, தமிழக டேபிள் டென்னிஸ் சங்கத்தின் பாரா டேபிள் டென்னிஸ் கமிட்டி ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்தின. இந்நிலையில் நேற்று நடைபெற்ற டபிள்யூஎஸ்04-05 பிரிவு இறுதி ஆட்டத்தில் பவீனாபென் ஹஸ்முக்பாய் படேல் 3-0 (11-2, 11-4, 11-4) என்ற செட் கணக்கில் காஜல் மக்வானாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.