இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
இந்திய வீராங்கனைகளுக்கான ஊதியத்தை 150% வரை உயர்த்தி பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய பெண்கள் அணி இப்போது உலக சாம்பியன். ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. லீக் சுற்றின் ஒருகட்டத்தில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்திய அணி. அவர்களால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய இந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியனும் ஆகிவிட்டது.
அதாவது, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு நிகராக மகளிர் அணியும் அனைத்துவிதமானப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருகிறது. இந்தநிலையில், திருத்தப்பட்ட ஊதிய அமைப்பின்படி, கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்கமளிக்கும் விதமாக உள்நாட்டு போட்டிகளில் சீனியர் வீராங்கனைகள் இனி தினசரி ஊதியமாக ரூ.50,000, ரிசர்வ் வீராங்கனைகள் முறையே ரூ.25,000 மற்றும் ரூ.12,500 ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சீனியர் வீராங்கனைகள் ஒருநாளைக்கு போட்டிக் கட்டணமாக ரூ.20,000 மட்டுமே பெற்றனர். இதேபோல், ரிசர்வ் வீராங்கனைகளுக்கும் ஊதியம் ரூ.10,000 ஆக இருந்தது. கடைசியாக 2021ஆம் ஆண்டு மகளிர் போட்டிக் கட்டணத்தைத் திருத்திய பிசிசிஐ, மூத்த வீராங்கனைக்கு தினசரி சம்பளமாக ரூ.12,500 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி இருந்தது.
Admin Jan 16, 2026 0 94
Admin Jan 17, 2026 0 69
Admin Jan 18, 2026 0 62
Admin Jan 20, 2026 0 55
Admin Jan 20, 2026 0 52
Admin Oct 24, 2025 0 38
Admin Oct 24, 2025 0 27
Admin Oct 24, 2025 0 48
Admin Oct 24, 2025 0 17
Admin Dec 23, 2025 0 100
மாதம் ரூ.69,000 சம்பளம் தரும் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 8 நாள்களே...