திருவண்ணாமலையை ஆண்ட அரசனை பற்றிய படம் தான் திரெளபதி 2: சஸ்பென்ஸை உடைத்த மோகன்ஜி

திருவண்ணாமலையை ஆண்ட அரசனை பற்றிய படம் தான் திரெளபதி 2: சஸ்பென்ஸை உடைத்த மோகன்ஜி

திருவண்ணாமலையை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த வீர வல்ல மஹாராஜாவை பற்றியது திரெளபதி 2 என இயக்குநர் மோகன்ஜி தெரிவித்துள்ளார்.

‘திரௌபதி 2' திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மோகன்ஜி, கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி, Y.G. மகேந்திரன் மற்றும் நட்டி நடராஜ் உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய Y.G. மகேந்திரன், “படம் வெளியான பிறகு இயக்குநர் மோகன்ஜி மாபெரும் சிம்மாசனத்தில் அமரப் போகிறார். இந்தப் திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்த பலரும் இன்னொரு பாகுபலியா? என்று கேட்டால், ஆம் என்று கூறுவேன். ஆனால் இது கற்பனை கதை இல்லை. இந்த படத்தில் நான் ராமநாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்த காலத்தில் இந்த பெயரை பலர் தங்களது உடலில் எழுதிக் கொள்வார்கள். உடலில் எழுதாமல் வேறு எங்கேனும் எழுதியிருந்தால் இந்நேரம் அதற்கும் வழக்குப்பதிவு செய்திருப்பார்கள்” என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய நடிகர் நட்ராஜ், “மெலடி பாடல்கள் சில காலங்களாக வருவதில்லை. ஆனால் ஜிப்ரான் இந்த படத்தில் அருமையாக இசையமைத்திருக்கிறார். இயக்குநர் மோகன் ஜிக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறினார்.

விழாவில் பேசிய Y.G. மகேந்திரன்
விழாவில் பேசிய Y.G. மகேந்திரன்
படத்தின் நாயகன் ரிச்சர்ட் ரிஷி பேசுகையில், “திரௌபதி 1 எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதை விட அதிக தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். சமூக அக்கறை மற்றும் கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த திரைப்படத்தில் இருக்கிறது. படத்தை அனைவரும் குடும்பத்துடன் பாருங்கள்.

இயக்குநர் மோகன்ஜி இந்த படம் உருவான பின்னணி குறித்து பேசினார். அப்போது அவர், “நிறைய தயாரிப்பாளர்களிடம் கதையை கூறினேன். ஹீரோவை மாற்று என்றனர். ஆனால் எனக்கு அவர் தான் ஹீரோ. இதில் தெளிவாக இருந்தேன். இப்படியே விடாமல் முயற்சித்ததில், இறுதியாக நேதாஜி தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டது. நிச்சயமாக இந்த படம் வெற்றி பெற்று, ஒரு எடுத்துக்காட்டாக மாறும்.

‘திரௌபதி 2’ திரைப்படமானது 14 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆண்ட பேரரசர் வீர வல்ல மஹாராஜாவை பற்றியது. நாம் இப்போது பயன்படுத்துகிற ‘தோலை உரித்து தொங்க விடுவேன்’ என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்திய இந்த அரசர் தான். இது போன்ற இன்னும் பல சுவாரஸ்யமான வசனங்கள் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

என்னுடன் வேலை செய்தவர்களை ஏன் மோகன்ஜி படத்தில் நடிக்கிறாய் என ஒரு சில கேட்கிறார்கள். இதனால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி கேட்டவர்கள் யார் என்று சொல்ல விரும்பவில்லை” என்றார்.

மேலும் தான் ஒரு சிறு தவறு செய்துவிட்டதாகவும், (சின்மயி பாடியதை சூசகமாக குறிப்பிட்டு பேசி உள்ளார்) அதற்கு பதிலாகத் தான் பத்மாவை பாட வைத்ததாகவும் கூறினார்.

நிறைவாக நடிகர் வேல ராமமூர்த்தி பேசுகையில், "தமிழ்நாடு தற்போது தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க அதிக துணிச்சல் வேண்டும். எல்லோராலும் சரித்திர படத்தை எடுத்து விட முடியாது" எனவும் கூறினார்.