குடி​யிருப்பு வளாகத்​தில் துப்பாக்கிச் சூடு: நடிகர் கமால் ஆர் கான் கைது

குடி​யிருப்பு வளாகத்​தில் துப்பாக்கிச் சூடு: நடிகர் கமால் ஆர் கான் கைது

குடி​யிருப்பு வளாகத்​தில் துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​ய​தாகப் பாலிவுட் நடிகர் கமால் ஆர் கானை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

மும்பை அந்​தேரி​யில் உள்ள ஒஷிவ​ரா​வில் நாளந்தா சொசைட்டி என்ற அடுக்​கு​மாடி குடி​யிருப்பு உள்​ளது. இந்த வளாகத்​தில் கடந்த 18-ம் தேதி துப்​பாக்​கிச் சூடு நடை​பெற்​றது. இதில் 2வது மாடி​யில் உள்ள எழுத்​தாளர் நீரஜ் குமார் மிஸ்ரா என்​பவரது வீட்​டிலும் 4-வது மாடி​யில் இருந்த மாடல் பிரதீக் பெய்ட் வீட்​டிலும் துப்​பாக்​கிக் குண்டு பாய்ந்​தது.

குடி​யிருப்பு வாசிகள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​திய சம்பவம் தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இதைச் சுட்​டது யார் என்​பது குறித்து எந்த தகவலும் கிடைக்​க​வில்​லை. தொடர்ந்து நடத்​திய விசா​ரணை​யில் அதை செய்​தது நடிகர் கமால் ஆர் கான் என்​பது தெரிய​வந்​தது. துப்​பாக்​கிச் சூடு நடத்தியதை அவர் ஒப்​புக்​கொண்​டார்.

பின்​னர் அவரை போலீ​ஸார் நேற்று காலை கைது செய்​தனர். அவரிடம் இருந்த துப்​பாக்​கியை பறி​முதல் செய்​தனர். “உரிமம் பெற்ற துப்​பாக்​கியைப் பயன்​படுத்​தி​ய​தாக​வும், யாருக்​கும் தீங்கு விளைவிக்​கும் நோக்​கம் தனக்கு இல்லை என்​றும் கமால் ஆர் கான் கூறிய​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். சமூக ஊடகங்​களில் அடிக்​கடி சர்ச்​சைகளில் சிக்​குபவர் கமால் ஆர் கான்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.