‘ஐஸ்வர்யா ராயே நினைவுக்கு வருவார்…’- படையப்பா மேக்கிங் பகிரும் ரஜினிகாந்த்

படையப்பா திரைப்படம் வரும் 12ஆம் தேதி மீண்டும் வெளியிடப்பட உள்ளது. அதனையெட்டி வெளியிடப்பட்ட வீடியோவில் படத்தின் மேக்கிங் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார்

‘ஐஸ்வர்யா ராயே நினைவுக்கு வருவார்…’- படையப்பா மேக்கிங் பகிரும் ரஜினிகாந்த்
ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன ‘படையப்பா’ திரைப்படம் அவரது பிறந்த நாளான வரும் 12ஆம் தேதியை முன்னிட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரஜினி கெரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்றான ‘படையப்பா’ மீண்டும் வெளியிடப்படுவது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ‘படையப்பா’ படத்தின் உருவாக்கம் குறித்து ரஜினிகாந்த் சுவாரஸ்யமான வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார். 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு ஒட்டி ‘படையப்பா’ திரைப்படம் வெளியானது. ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
ஏ.ஆர். ரகுமான் ‘படையப்பா’ படத்திற்கு இசையமைத்திருந்தார். ரஜினிகாந்த் ரசிகர்களை கவரும் வகையில் ஆக்சன், செண்டிமெண்ட், குடும்ப நாடகம் உள்ளிட்டவற்றை கலந்து ஜனரஞ்சகமான படத்தை கே.எஸ். ரவிக்குமார் வழங்கி இருந்தார். படையப்பாவாக ரஜினிகாந்தின் நடிப்பு இந்த படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதேபோன்று வில்லி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக நடித்திருந்தார். படையப்பா மற்றும் நீலாம்பரியின் குடும்பத்துக்கு இடையே நடக்கும் மோதல்கள் ரசிகர்களுக்கு விறுவிறுப்பை கொடுத்தன.
இந்த படத்துடைய கிளைமாக்ஸ் காட்சி அதிகம் பேசப்பட்டது. ‘படையப்பா’ படத்தில் ரஜினிகாந்த் ஸ்டைல், கம்பீரம், காமெடி மற்றும் எமோஷனலாக அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த சூழலில் இந்த திரைப்படம் வரும் 12ஆம் தேதி மீண்டும் வெளியிடப்பட உள்ளது. அதனையெட்டி வெளியிடப்பட்ட வீடியோவில் படத்தின் மேக்கிங் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதில், நீலாம்பரி என்றாலே ஐஸ்வர்யா ராய் தான் மைண்டுக்கு வருவார் என்று சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார்.