கிளைமேக்ஸ் போல நிஜத்திலும் நடந்த சோகம்.. யார் ஹீரோ தெரியுமா?
பிரபல இளம் நடிகரின் மறைவுக்கு பின்னர் வெளியான அவரது திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களின் இதயங்களை வென்றது.
நடிகர் சுஷந்த் சிங் ராஜ்புத் இந்தி திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகராக இருந்தார். இவர் தனது 34 வயதில் 2020 ஜூன் 14 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணைகள் நடைபெற்றன.
அவரது மரணத்திற்கு பிறகு அவரின் கடைசி படமான தில் பெச்சாரா 2020 ஜூலை 24 ஆம் தேதி வெளிவந்தது.
கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப் படம் நேரடியாக 'Disney+ Hotstar' ஓடிடி தளத்தில் வெளியானது. சுஷாந்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, சந்தாதாரர்கள் அல்லாதவர்களும் பார்க்கும் வகையில் இது இலவசமாகத் திரையிடப்பட்டது.
படத்தில் சுஷாந்த் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோகும் ஒரு இளைஞனாக நடித்திருப்பார்.
நிஜ வாழ்க்கையிலும் அவர் மறைந்துவிட்ட நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் இறப்பதைப் பார்த்து ரசிகர்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.
இந்தப் படம் வெளியான சமயத்தில், சுஷாந்தின் நினைவாக ரசிகர்கள் அளித்த பேராதரவால் இதன் IMDb மதிப்பீடு மிக வேகமாக உயர்ந்து 8.3 (ஒரு கட்டத்தில் 9-க்கும் மேல் இருந்தது) என்ற நிலையை எட்டியது.