“தீபிகா படுகோன் என் அதிர்ஷ்டம்” - இயக்குநர் அட்லி
ஷாருக்கான் ஹீரோவாக நடித்த ‘ஜவான்’ படத்தை அட்லி இயக்கி இருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இதையடுத்து, அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார்.
சயின்ஸ் பிக் ஷன் படமான இது பான் வேர்ல்டு படமாக இருக்கும் என்று படக்குழு ஏற்கெனவே கூறியிருந்தது. ‘ஜவான்’ படத்தை அடுத்து இதிலும் தீபிகா படுகோன் நாயகியாக நடித்து வருகிறார். இதுபற்றி அட்லியிடம் கேட்டபோது, “தீபிகாவுடன் நான் இணைந்திருக்கும் 2-வது படம் இது.
அவருடன் பணியாற்றுவது அற்புதமான அனுபவம். அவர் உண்மையிலேயே நம்ப முடியாதவர். அவர் என் அதிர்ஷ்டம். தாயான பிறகு அவர் நடிக்கும் படம் இது. நிச்சயம் முற்றிலும் மாறுபட்ட தீபிகாவைப் பார்க்கப் போகிறீர்கள். இந்தப் படம் பற்றிய அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நானும் அதை அவர்களுக்குக் கொடுக்க ஆர்வமாக இருக்கிறேன். நம்புங்கள், கண்டிப்பாக இந்தப் படம் ரசிகர்களை மகிழ்விக்கும்” என்று கூறினார்.