U 19 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை அறிவித்தது ஐசிசி!

U 19 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை அறிவித்தது ஐசிசி!

ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள U-19 உலகக் கோப்பைக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையோருக்கான ஐசிசி U -19 ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான அட்டவணையானது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது ஜனவரி 15ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதேசமயம் முதல் நாள் நடைபெறும் மற்ற லீக் ஆட்டங்களில் ஜிம்பாப்வேவை எதிர்த்து ஸ்காட்லாந்தும், வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து தான்சானியாவும் விளையாடவுள்ளது. இதில் தான்சானியா அணி வரலாற்றில் முதல் முறையாக அண்டர்19 உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணிகள் இடம்பெற்றுள்ள குழுக்கள்

மொத்தம் 16 அணிகள் பங்கேற்பதால், மொத்தம் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதவுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸுக்கு முன்னேறும். அதனைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

குரூப் சி பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன், அயர்லாந்து, ஜப்பான் மற்றும் இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் டி பிரிவில் உலகக்கோப்பை தொடரை இணைந்து நடத்தும் நமீபியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் அறிமுக அணியான தான்சானியா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

நடப்பு யு19 உலகக் கோப்பை தொடரானது ஜிம்பாப்வே, நமீபியாவில் உள்ள 5 மைதானங்களில் நடைபெறவுள்ளன. அந்தவகையில், ஜிம்பாப்வேவ்வில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றிலும், நமீபியாவின் ஹெச்பி ஓவல் மற்றும் நமிபியா கிரிக்கெட் மைதானத்திலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.