ரூ.245 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.245 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழக தொழில் துறை சார்​பில் ரூ.190 கோடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள மெகா உணவுப் பூங்​காக்​கள், சட்​டத் துறை சார்​பில் ரூ.54.67 கோடி​யில் கட்​டப்​பட்ட கல்​வி​சார் கட்​டிடங்​கள், சமூகநலத் துறை சார்​பில் ரூ.43.88 லட்​சத்​தில் திருநங்​கைகளுக்​காக அமைக்​கப்​பட்ட அரண் இல்​லங்​களை முதல்​வர் ஸ்டா​லின் காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக தொழில் துறை சார்​பில் தேர்​வாய்​கண்​டிகை, வல்லம் வடகால், சிறுசேரி, கும்​மிடிப்​பூண்​டி, கடலூர், பர்​கூர், பெருந்​துறை, தூத்​துக்​குடி, நிலக்​கோட்​டை, ராணிப்​பேட்​டை, புதுக்​கோட்​டை, மானா மதுரை, ஒரகடம், பிள்​ளைப்​பாக்​கம், ஓசூர், கங்​கை​கொண்​டான் ஆகிய 16 தொழில் பூங்​காக்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள குழந்​தைகள் காப்​பகங்​களை முதல்​வர் ஸ்டா​லின் காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார்.

விழுப்​புரம் மாவட்​டத்​தில் கொள்​ளார், பெலாகுப்​பம் ஆகிய கிராமங்​களை உள்​ளடக்கி 157.91 ஏக்​கரில் ரூ.120 கோடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள திண்​டிவனம் மெகா உணவு பூங்​கா, தேனி மாவட்​டம் உப்​பார்​பட்​டி, தப்​பு​குண்​டு, பூமலைகுண்டு ஆகிய கிராமங்​களை உள்​ளடக்கி 123.49 ஏக்​கரில் ரூ.70 கோடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள தேனிமெகா உணவுப் பூங்காவை​யும் முதல்​வர் திறந்து வைத்​தார்.

சட்​டத் துறை சார்​பில் மதுரை அரசு சட்​டக் கல்​லூரிக்​காக தல்​லாகுளம் தங்​க​ராஜ் சாலை​யில் 1.35 லட்​சம் சதுரஅடி பரப்​பில் ரூ.48.20 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள கல்​வி​சார் மற்​றும் நிர்​வாக தொகுதி கட்​டிடங்​கள், வேலூர் அரசு சட்​டக் கல்​லூரிக்​காக காட்​பாடி வட்​டம் காந்தி நகரில் 20 ஆயிரம் சதுரஅடி பரப்​பில் ரூ.6.47 கோடி​யில் தரை மற்​றும் 2 தளங்​களு​டன் கட்​டப்​பட்​டுள்ள நூல​கக் கட்​டிடம் ஆகிய​வற்றை முதல்​வர் திறந்து வைத்​தார்.

சமூகம், மனநலம், பாது​காப்பு தொடர்​பாக திருநங்​கைகள் எதிர்​நோக்​கும் சவால்​களை கருத்​தில் கொண்​டு, அவர்​களுக்கு பாது​காப்​பான, மதிப்​பு, மரி​யாதை நிறைந்த, ஆதர​வான வாழ்​விடச்சூழலை உரு​வாக்​கும் நோக்​கில்,சமூகநலத் துறை சார்​பில் ‘அரண்இல்​லம்’ எனும் சிறப்பு மையங்​களை அமைக்க தீர்​மானிக்​கப்​பட்​டது. முதல்​கட்​ட​மாக, சென்னை ஷெனாய் நகர், மதுரை அண்ணா நகரில் ரூ.43.88 லட்​சத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள அரண் இல்​லங்​களை திறந்து வைத்தார். இந்த நிகழ்​வு​களில் அமைச்​சர்​கள் துரை​முரு​கன், கீதா ஜீவன், டிஆர்​பி. ராஜா, தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் உள்​ளிட்​ட உயர் அதிகாரிகள் பங்​கேற்​றனர்​