பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாபி சிம்ஹா நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியானது. இந்த ஆண்டு எந்தப் படமும் வெளியாகவில்லை. அடுத்து பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் படத்தை தெலுங்கு இயக்குநர் மெஹர் யாரமாட்டி இயக்குகிறார்.
ஹெப்பா படேல் நாயகியாக நடிக்கிறார். பூஜையுடன் தொடங்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.
இந்த படத்தில் தனிகில்லா பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே. கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த் சதாசிவுனி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
இந்தப் படம் குறித்து பாபி சிம்ஹா கூறுகையில், “‘வால்டேர் வீரய்யா’ படத்திற்கு பிறகு தெலுங்கில் நான் நடிக்கும் படம் இது. தெலுங்கில் நாயகனாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது பல கதைகளை கேட்டேன். ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த நேரத்தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்தார். கதையை கேட்டவுடன் மிகவும் பிடித்தது. இது ஒரு நடிகனாக எனக்கு சவாலான கதை.
என் திரைவாழ்க்கையில் இது ஒரு புதிய முயற்சி. இதில் தாத்தா கதாபாத்திரம் உள்ளது. அந்த வேடத்தை பரணி அவர்கள் செய்கிறார் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருடன் நடிப்பது ஒரு பெரிய சந்தோஷம். ஹெப்பா ஒரு சிறந்த நடிகை. அவருடன் பணியாற்றுவதும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கதை சவாலானதாக இருப்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். டிசம்பர் 22 முதல் விசாகபட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.” என்றார்.