நபீன் தான் எனக்கு தலைவர்..நான் சாதாரண தொண்டன் – மோடி

நபீன் தான் எனக்கு தலைவர்..நான் சாதாரண தொண்டன் – மோடி

பாஜகவின் தேசிய தலைவராக இருந்த ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்வதாக தேசிய தலைமை அறிவித்தது. அதன்படி பாஜகவின் தேசிய தலைவராக போட்டியின்றி நிதின் நபீன் தேர்வு செய்யப்பட்டார்.

அவர் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார். டெல்லியில் நடைபெற்ற கட்சி தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜகவின் தலைவர்கள் பங்கேற்றனர்.

புதிதாக தலைவராக தேர்வான நிதின் நபீனுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, கட்சி என்று வரும் போது நபீன் தான் எனக்கு பாஸ். நான் கட்சியின் ஒரு சிறிய தொண்டன். மதிப்பிற்குரிய நிதின் நபீன் நம் அனைவருக்கும் தலைவர். பாஜகவை நிர்வகிப்பது மட்டும் அவரது கடமை இல்லை, ஜனநாயக கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதும் அவரது கடமை” என புதிதாக தேர்வான தலைவரை உயர்த்தி மோடி பேசினார்.