அடுத்தடுத்து கட்சி மாறும் அதிமுக தலைவர்கள்... என்ன செய்ய போகிறார் இபிஎஸ்?

அடுத்தடுத்து கட்சி மாறும் அதிமுக தலைவர்கள்... என்ன செய்ய போகிறார் இபிஎஸ்?

அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் கட்சி மாறி வருவது அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ்.சுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இஸ்லாமியர்கள் சமூகத்தில் முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட அன்வர்ராஜா அண்மையில் திமுகவில் இணைந்தார். இதேபோல், தென் தமிழகத்தில் அதிக வாக்குகளை கொண்ட நாடார் சமூகத்தை சேர்ந்த மனோஜ் பாண்டியன் அண்மையில் திமுகவில் சேர்ந்தார்.

ஏற்கெனவே  மூத்த தலைவர் செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்து அக்கட்சியில் முதல்வர் ஸ்டாலினின் தளபதியாகவும், நம்பிக்கைக்குரிய தலைவராகவும் உள்ளார். இதேபோல் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் தனித்து செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான செங்கோட்டையன், தவெகவில் இணைவது உறுதியாகியுள்ளது. மேலும், 2026 தேர்தலுக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் அதிருப்தியில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் திமுக, தவெகவில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த பிரச்னையை இபிஎஸ் எப்படி சமாளிக்கப் போகிறார் எனத் தெரியவில்லை.