மீண்டும் இணையும் ‘96’ கூட்டணி
ஆதித்யா பாஸ்கர் – கெளரி கிஷன் இருவரும் புதிய படமொன்றில் இணைந்து நடித்துள்ளனர்.
‘96’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆதித்யா பாஸ்கர். அதில் கெளரி கிஷனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்துக்குப் பிறகு தற்போது இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடித்து முடித்திருக்கிறார்கள். இதன் தலைப்பு, எப்போது வெளியீடு உள்ளிட்டவை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ஆர்ஜின் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி, “உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய ஜென் ஜீ தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் '96' படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் ஜோடி திரையில் மேஜிக் செய்திருக்கிறார்கள். இது அனைத்து ரசிகர்களையும் கவரும்'' என்று தெரிவித்துள்ளார்.