உயிருடன் முதியவர் எரித்து கொலை! கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் கணவன், மனைவி ஆத்திரம்
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ரூ.5,600 கடன் விவகாரத்தில் உயிருடன் முதியவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏஎஸ்ஆர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான கொரோ ராமன்னா துராவிடம் அதே பகுதியைச் சேர்ந்த வந்தலா சோமன்னா ரூ.5,600 கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டு ராமன்னா அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சோமன்னா ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
சம்பவத்தன்று சோமன்னாவும், அவரின் மனைவியும் நடந்து சென்றபோது 2 பேரிடமும் பணத்தை ராமன்னா கேட்டுள்ளார். அப்போது அவரை கடுமையாக தாக்கிய கணவனும், மனைவியும், தரதரவென இழுத்து சென்று குடிசைக்குள் தள்ளி தீவைத்தனர்.
இதில் சோமன்னா உடல்கருகி பலியானார். புகாரின்பேரில் கணவன், மனைவியை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.