32 பந்துகளில் சதம்... ராஞ்சி போட்டியில் அபாரம்

32 பந்துகளில் சதம்... ராஞ்சி போட்டியில் அபாரம்

32 பந்துகளில் பீகார் அணி வீரர் சஹிபுல் கனி சதம் அடித்து இந்தியாவில் நடைபெற்ற முதல் தரக் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ராஞ்சியில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், அருணாச்சல பிரதேசமும், பீகார் அணியும் மோதின. இதில் பீகார் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பீகார் வீரர்கள் சஹிபுல் கனி,  சூரியவன்சி ஆகியோர் பட்டையை கிளப்பினர். 32 பந்துகளில் சஹிபுல் கனி சதம் விளாசி, முதல் தரக் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய முதலாவது இந்திய வீரர் என்ற புது சாதனை படைத்தார். உலக அளவில் அதிவேகமாக முதல் தரக் கிரிக்கெட்டில் சதமடித்த 3வது வீரர் என்ற சாதனையையும் அவர் புரிந்தார்.

சூரியவன்சியும் சாதனை: இதேபோல் 36 பந்துகளில் சதமடித்த இன்னொரு வீரர் சூரியவன்சி, பிறகு மொத்தம் 59 பந்துகளை எதிர்கொண்டு 150 ரன்களை விளாசி, குறைந்த பந்துகளில் 150 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். இப்போட்டியில் அவர் மொத்தம் 190 ரன்களை  விளாசினார்.

அதிக சிக்சர்கள்: இதேபோல், அருணாசல பிரதேசத்திற்கு எதிராக மொத்தம் 36 சிக்சர்களை பீகார் அணி விளாசியுள்ளது. இதுவே முதல் தரக் கிரிக்கெட் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட அதிக சிக்சர்கள் ஆகும்.

இதற்கு முன்பு, 2019ல் மலேசியாவுக்கு எதிராக கனடா அணி விளாசிய 28 சிக்சர்களே சாதனையாக இருந்தது.