ரோஹித் 155 ரன்கள் விளாசல்... சிக்கிமை சாய்த்தது மும்பை
ரோஹித் சர்மாவின் அதிரடியால், சிக்கிமை மும்பை அணி எளிதில் வென்றது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில், குரூப் சி பிரிவு அணிகளான மும்பை, சிக்கிம் விளையாடின.
இதில் முதலில் பேட் செய்த சிக்கிம் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து மும்பை அணி பேட் செய்தது. ரகுவன்சி, ரோஹித் சர்மா ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரகுவன்சி 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ரோஹித்துடன் முசிர்கான் ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 155 ரன்களை குவித்தார். இதனால் 30.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 237 ரன்களை எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது.
ஆட்ட நாயகனாக சதம் விளாசிய மும்பை அணி வீரர் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.