இடுக்கியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி

இடுக்கியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இடுக்கி கட்டப்பனையில் உள்ள உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன், மைக்கேல் என்கிற செல்வன், சுந்தரபாண்டியன் ஆகியோர் ஈடுபட்டனர்.

கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் சென்ற மைக்கேல் வர தாமதமானதால், ஒப்பந்ததாரரான ஜெயராமன் உள்ளே இறங்கியபோது மயக்கமுற்றார். அவரைத் தொடர்ந்து சுந்தரபாண்டியனும் தொட்டியில் இறங்கியபோது மயக்கமடைந்தார்.

அவர்கள் 3 பேரும் உடனடியாக கட்டப்பனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இடுக்கியில் தமிழகத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.