நிவின் பாலி நடித்த “சர்வம் மாயா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நிவின் பாலி நடித்த “சர்வம் மாயா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் நிவின் பாலி நடித்துள்ள “சர்வம் மாயா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர்,'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பிரபலமானவர். இந்த நிலையில் அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "சார்வ மாயா". இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், நேற்று வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது.

இதில் நடிகர் நிவின் பாலி, நடிகர் அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். போஸ்டரில் அவர்களின் தோற்றம், சர்வம் மாயா திரைப்படத்தின் வித்தியாசமான உலகை பார்க்கும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. “சர்வம் மாயா” போஸ்டர் இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தோடு ரசிக்கக் கூடிய நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

நடிகர்கள் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரின் முகபாவனைகள், அனைத்து தரப்பினரையும் கவரும் நகைச்சுவை கலாட்டாவாக இப்படம் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. காமெடி டிராமா வகை படங்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார் என்பதையும் இந்த போஸ்டர் உணர்த்துகிறது.

அட்டகாசமான காமெடியுடன், கொண்டாட்ட உணர்வை பதிவு செய்யும் இந்த படம், இந்த ஆண்டின் சிறந்த விடுமுறை கொண்டாட்ட இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காடின் மகனான அகில் சத்யன் இயக்கத்தில், ஃபயர்ஃபிளை ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள “சர்வம் மாயா”, 2025-ன் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

2025 கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாக கூடிய சார்வ மாயா" திரைப்படத்தில் புதிய போஸ்டரில் சாமியார்கள் போல விபூதி, பட்டை அடித்து கொண்டு நடிகர்கள் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.