காதல் மீதான ஆர்வம் அதிகம் இருக்கும் - எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?

காதல் மீதான ஆர்வம் அதிகம் இருக்கும் - எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?

மேஷம்: இன்று அமானுஷ்யமான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அது தொடர்பான புத்தகங்களை வாங்கி படித்து அறிந்துகொள்ள விரும்புவீர்கள். இந்த அறிவை நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

ரிஷபம்: உங்களுக்கு தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்து வந்த ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்களது வருங்கால நலனை கருத்தில் கொண்டு அவரை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது. உங்களது வளமான எதிர்காலத்தை பாதிக்காத வண்ணம் எதிர்வினை ஆற்றவும்.

மிதுனம்: நெடுநாட்களாக விரும்பிய குடும்பத்தினர் சந்திப்பை உங்கள் வீட்டில் இன்று ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளது. இன்று அதற்கு உகந்த நாளாக இருக்கும். நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய வர்த்தக கூட்டாளிகளையும் அழைத்து விருந்தளிக்கலாம்.

கடகம்: இன்று நீங்கள் குதூகலமான மனநிலையில் இருப்பீர்கள். வேடிக்கை, வம்பு பேச்சுக்கள், சிரிப்பு நிறைந்திருக்கும். நாளின் பிற்பகுதியில் வழக்கமான அமைதி நிலைக்கு திரும்பி பணியில் கவனம் செலுத்துவீர்கள்.

சிம்மம்: இன்று முழுவதும் பணியிடத்திலேயே இருப்பீர்கள். பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், மேலதிகாரியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பணிகளை மேற்கொள்வார்கள். இல்லத்தரசிகளுக்கு தினசரி பணிகளை தவிர வேறுவிதமான வேலைகளையும் சமாளிக்க வேண்டிய நிலை இருக்கும்.

கன்னி: இன்று நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு இன்று சிறந்த நாளாக இருக்கும்.

துலாம்: உறுதியான மன நிலையுடன் கடுமையான முடிவுகள் எடுக்கும் உங்கள் இயல்பின் காரணமாக, சிறந்த வகையில் பலனடைவீர்கள். உயரதிகாரிகள் உங்களது திறமை மற்றும் செயலாற்றலை பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். பணியிடத்தில் பதவி உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்: காதல் மீதான ஆர்வம் அதிகம் இருக்கும். காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இதில் தவறு ஏதும் இல்லை. உங்களது எல்லை வரம்பு என்ன என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

தனுசு: இன்று ஏதோ ஒரு விஷயத்தில் சிக்கிக்கொண்டது போன்ற உணர்வு இருக்கும். ஒரே விதமான பணியால் உற்சாகம் இல்லாமல் இருப்பீர்கள். குதூகலிக்கும் வகையிலான விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் பொறுமையாக இருக்கவும்.

மகரம்: உங்களது அபரிமிதமான பேச்சாற்றல் காரணமாக சுற்றி இருப்பவர்களை உங்கள் வசம் கொண்டுவருவீர்கள். பிரச்சினைகளின் ஆணி வேர் வரை சென்று, ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பீர்கள்.

கும்பம்: இன்று நீங்கள் புதை மணலில் சிக்கிக்கொண்டதைப் போல் இருப்பீர்கள். எனினும், எவரின் ஆதரவுமின்றி அதிலிருந்து மீண்டு விடுவீர்கள். உங்களுடைய உறுதியான மனப்பான்மை, உங்களை காப்பாற்றி கரை சேர்க்கும்.

மீனம்: உங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் ஆர்வம் எப்போதும் இருக்கும். அதற்கான காரணத்தை நீங்கள் தேடிக்கொண்டே இருப்பீர்கள். தினசரி பணியிலிருந்து சிறிது விலகி புத்துணர்ச்சி பெற இது மிகவும் தேவையான விஷயமாகும்.