சச்சினின் வாழ்நாள் சாதனையை முறியடித்த விராட்.. உலக சாதனை படைத்த ரோஹித்

சச்சினின் வாழ்நாள் சாதனையை முறியடித்த விராட்.. உலக சாதனை படைத்த ரோஹித்

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் சதம் அடித்த விராட் கோலி சச்சினின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளார். முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் ஒரு நாள் போட்டிகளில் உலகசாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ராஞ்சியில் நேற்று நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வீரர்களின் பந்து வீச்சை நாலாப்புறமும் பறக்க விட்ட விராட் கோலி, சதம் அடித்தார். இதன் மூலம், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 52 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். ஒட்டுமொத்த அளவில் விராட் கோலி 83-வது சதத்தினை சர்வதேச அரங்கில் பதிவு செய்துள்ளார்.

மேலும் ஒரு ஃபார்மெட்டில் அதிகமான சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக இந்த சாதனை டெஸ்ட் ஃபார்மெட்டில் 51 சதங்கள் அடித்திருந்த சச்சின் வசம் இருந்தது. அந்த வகையில் சச்சின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி.அது மட்டுமின்றி தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக 6 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

 இதே போன்று, தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் 3 சிக்ஸர்களை பறக்க விட்ட ரோகித் ஷர்மா, பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், 352 சிக்ஸர்களுடன் ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 229 சிக்ஸர்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளார்.