மகளிர் உரிமைத் தொகை இனி ரூ.2000!. தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட EPS!
எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளையொட்டி, 2026 தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில், மகளிர் குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைவருக்கும் இலவச வீடு, மகளிர் போல ஆண்களுக்கும் நகர பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.