குடியரசு தினத்தில் “ஜன நாயகன்” ரிலீஸ்?. வெளியான தகவல்!

குடியரசு தினத்தில் “ஜன நாயகன்” ரிலீஸ்?. வெளியான தகவல்!

நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜன நாயகன். இப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டுவருகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கவேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், படத்திற்கு தணிக்கை சான்று வழங்கவேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவிற்கு எதிராக தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது தணிக்கை வாரியம்.

இந்தசூழலில் ஜனநாயகன் பட நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த உத்தரவால் படம் பொங்கலை தாண்டி செல்லும் நிலை ஏற்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தது தயாரிப்பு நிறுவனம்.
இதனை தொடர்ந்து விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று முன் தினம் விசாரணைக்கு  வந்தது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க எங்களுக்கு விருப்பமில்லை, வழக்கில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை, உங்கள் தரப்பு வாதங்களை சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் தெரிவியுங்கள் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். ஜனநாயகன் பட வழக்கை ஜன.20ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவித்துள்ளது. ஜனநாயகன் பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை தந்தது.
இந்த நிலையில், ஜன.20ம் தேதி சென்சார் கொடுக்க உத்தரவிட்டால், குடியரசு தினத்தையொட்டி, ஜன.24ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய  படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஜன.24 முதல் 26 வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள படக்குழு இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
Share.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த punnagaiseithi.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.