ஜன.23-ல் ‘கருப்பு’ ரிலீஸ்: உரிமைகள் விற்பனை நிறைவு
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் விற்காமல் இருந்ததால் எப்போது வெளியீடு என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. தற்போது இப்படத்தின் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையினை ஜீ நிறுவனமும் கைப்பற்றி இருக்கிறது.
விரைவில் ஜனவரி 23-ம் தேதி வெளியீடு என அறிவித்து, விளம்பரப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த முடிவு செய்திருக்கிறது படக்குழு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள ‘கருப்பு’ படத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ட்ரீம் வாரியர் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது