‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுபடி, விழுப்புரம் மாவட்டத்தில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் 15.07.2025 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேற்கண்ட முகாம்களில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம். மேற்படி முகாமில் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் சேவை, இ -சேவை போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த முகாமில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர விரும்பும் பெண்கள் நேரடியாக சென்று விண்ணப்பப் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை (14.10.2025), விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம், கோலியனூர் ஒன்றியம், கண்டமங்கலம் ஒன்றியம், வல்லம் ஒன்றியம், ஒலக்கூர் ஒன்றியம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியங்களிலும் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
வானூர் ஒன்றியம், வி.பரங்கினி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் முகாமில் சேமங்கலம், ரெங்கநாதபுரம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம் மற்றும் வி.பரங்கினி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கிடலாம். கோலியனூர் ஒன்றியம், தோகைப்பாடி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் முகாமில் தோகைப்பாடி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கிடலாம்.
கண்டமங்கலம் ஒன்றியம், இராம்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இராம்பாக்கம், சொர்ணவூர்மேல்பதி, சொர்ணவூர் கீழ்பதி, கலிஞ்சிக்குப்பம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கிடலாம்.
வல்லம் ஒன்றியம், திருவம்பட்டு, மாரியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமில் கப்பை, கல்லடிக்குப்பம், கீழ்மாம்பட்டு, கீழ்பாப்பாம்பாடி மற்றும் திருவம்பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கிடலாம்.
ஒலக்கூர் ஒன்றியம், பட்டணம், எஸ்.பி.ஜி திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமில் பட்டணம், நெய்குப்பி, மேல்பாக்கம், கிராண்டிபுரம், ஊரல் மற்றும் வெண்மணியாத்தூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கிடலாம்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், மடப்பட்டு, K.G.ஆறுமுகம் திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமில் அரும்பட்டு, மடப்பட்டு மற்றும் சித்தானாங்கூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கிடலாம்” என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.