இன்றைய ராசிபலன் 05 ஜனவரி 2026
மேஷம்: உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். நீண்டகால பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையின் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்து வாகனத்தை மாற்றுவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
கடகம்: பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். திடீர் பயணங்கள் ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மனைவிவழி உறவினர்களால் தர்மசங்கடமான சூழல் ஏற்படக் கூடும்.
கன்னி: முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டு கிட்டும். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். உறவினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். உங்கள் பேச்சில் உற்சாகம் தெரியும். பணவரவு திருப்தி தரும். வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.
தனுசு: யாருக்காகவும் எந்தவிதமான உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறியாகவே இருக்கும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.
கும்பம்: அதிரடியாகத் திட்டங்களை தீட்டுவீர்கள். சேமிக்கும் அளவுக்கு பணவரவு அதிகரிக்கும். உங்களைத் தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
மீனம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலத் திட்டங்கள் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.