முதல்வர் ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்தது.. திண்டுக்கல் டூ மதுரை செல்லும் வழியில் பரபரப்பு

முதல்வர் ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்தது.. திண்டுக்கல் டூ மதுரை செல்லும் வழியில் பரபரப்பு

 மதுரை அருகே சென்றபோது முதல்வர் ஸ்டாலினின் கார் டயர் வெடித்தது. திண்டுக்கல்லில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பிய போது காரின் டயர் வெடித்தது. கார் டயர் வெடித்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக முதல்வர் ஸ்டாலின் வேறு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் மதுரைக்கு தனது காரில் பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார்.

மதுரை நோக்கி முதல்வரின் கார் சீறிப்பாய்ந்து கொண்டு இருந்தது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் முதல்வரின் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்துள்ளது. உடனடியாக காரை டிரைவர் நிறுத்தியுள்ளார். அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

உடனடியாக வேறு காரில் அங்கிருந்து முதல்வர் மு.க ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். திருமங்கலம் அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது முதல்வரின் கார் டயரை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. கார் டயர் மாற்றப்பட்டதும் அங்கிருந்து கார் கொண்டு செல்லப்படும் எனக் கூறப்படுகிறது.