சேவாக் அஞ்சிய ஒரே பௌலர்... அன்று உலகின் 'நம்பர் 1'... இப்போ அக்கவுண்ட் மேனேஜர்!

சேவாக்கை ஒரு 'பயமில்லாத பேட்ஸ்மேன்' என்று உலகம் கொண்டாடிய போது, அவரைத் தனது பந்துவீச்சால் நிலைகுலையச் செய்த உலகின் முன்னணி பந்துவீச்சாளர் கிரிக்கெட்டில் இருந்து விலகி ஒரு கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக பணியாற்றுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருந்த அந்த வீரர் யார் தெரியுமா?
 சச்சின் டெண்டுல்கர் ஒருமுறை அளித்த நேர்காணலில், "என் வாழ்நாளில் சேவாக் ஒரு பந்துவீச்சாளரை எதிர்கொள்ளத் தயங்குகிறார் என்றால், அது நேதன் பிராக்கன் தான்." என்றார். ஆம் அது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நேதன் பிராக்கன் தான். வழக்கமாக முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து பந்துவீச்சாளர்களைப் பயமுறுத்தும் சேவாக், நேதன் பிராக்கன் பந்துவீச வரும்போது மட்டும் அமைதியாகிவிடுவார். இதற்குக் காரணம் பிராக்கன் வீசும் இடது கை ஸ்விங். அவரின் இந்த பௌலிங்கில் பந்து உள்ளே வருமா அல்லது வெளியே செல்லுமா என்று கணிக்க முடியாமல் சேவாக் திணறுவார்.

 2003-ல் முத்தரப்பு தொடரில் ஒரு போட்டியில் பிராக்கன் வீசிய முதல் ஓவரிலேயே சேவாக் 'டக் அவுட்' ஆகி வெளியேறினார். அடுத்த போட்டியிலும் அதே கதை! பிராக்கனின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் சேவாக் 'டக் அவுட்' ஆனார். சேவாக்கின் முகத்தில் ஒருவிதமான குழப்பத்தையும், தயக்கத்தையும் ரசிகர்கள் முதல்முறையாக அந்தப் போட்டிகளில் தான் பார்த்தார்கள்.

 2008-ல் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருந்த நேதன் பிராக்கன், 2003 மற்றும் 2007 உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார். தனது துல்லியமான ஸ்விங் பந்துவீச்சு மற்றும் நீண்ட தலைமுடிக்காக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். ஆஸ்திரேலியாவுக்காக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், வொயிட் பால் கிரிக்கெட்டில் தனது பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர் பிராக்கன். அவர் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

 2011-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேதன் பிராக்கனை ரூ. 1.3 கோடிக்கு வாங்கியது. ஆனால், அந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட கடுமையான முழங்கால் காயம் காரணமாகவும், உடல்நிலை ஒத்துழைக்காததாலும் அவர் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்தார். அதே ஆண்டு அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

 2011-ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பல முன்னாள் வீரர்களைப் போல நேதன் பிராக்கன் ஒரு வர்ணனையாளராக மாறவில்லை. அதற்குப் பதிலாக அவர் கார்ப்பரேட் துறையைத் தேர்ந்தெடுத்தார். தற்போது 47 வயதாகும் பிராக்கன் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள Fulton Hogan என்ற நிறுவனத்தில் 'அக்கவுண்ட் மேனேஜர்' ஆகப் பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்னதாக அவர் கட்டுமானப் பொருட்கள் தொடர்பான நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளதாக தனது வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

 இன்னொரு தகவல் நேதன் பிராக்கன் அரசியலிலும் ஈடுபட்டிருக்கிறார். 2013-ல் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 8.2% வாக்குகளைப் பெற்ற பிராக்கன், 2023-ல், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தலில் லிபரல் பார்ட்டி சார்பில் 'தி என்ட்ரன்ஸ்' தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

 ஒரு காலத்தில் உலகத்தையே அச்சுறுத்திய ஒரு வேகப்பந்து வீச்சாளர், இன்று ஒரு அலுவலகத்தில் மேலாளராகப் பணிபுரிவது பலருக்கும் ஒரு ஆச்சரியமான மாற்றமாகத் தோன்றலாம். இன்று நேதன் பிராக்கன் ஒரு அலுவலகத்தில் அக்கவுண்ட் மேனேஜராக இருந்தாலும், கிரிக்கெட் வரலாற்றில் "பயமறியா சேவாக்கை அச்சுறுத்திய ஒரே பந்துவீச்சாளர்" என்ற பெருமை அவருக்கு எப்போதும் உண்டு.