முன்னாள் மத்திய அமைச்சர், காங். மூத்த தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சர், காங். மூத்த தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடி காலமானார். அவருக்கு வயது 81.

முன்னாள் ரயில்வே இணை அமைச்சரான சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த இவர், அந்த தொகுதியின் எம்பியாக பலமுறை இருந்துள்ளார்.

நீண்டகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் கல்மாடி, இன்று (ஜன.6) அதிகாலை 3.30 மணி அளவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு மனைவி, ஒரு மகன், மருமகள், திருமணமான இரண்டு மகள்கள் உள்ளனர்.

சுரேஷ் கல்மாடியின் உடல் புனேவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் 2 மணி வரை வைக்கப்பட்டிருக்கும் என்றும், இறுதிச் சடங்குகள் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுரேஷ் கல்மாடியின் மறைவை அடுத்து, கட்சி பாகுபாடு இன்றி பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.