பெங்களூரு டூ தூத்துக்குடி ரயில் பயணிகளுக்கு தீபாவளி நற்செய்தி!

பெங்களூரு டூ தூத்துக்குடி ரயில் பயணிகளுக்கு தீபாவளி நற்செய்தி!

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு, தூத்துக்குடி இடையே இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கி உள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு வழித்தடங்களில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

அந்த வகையில் பெங்களூரு, தூத்துக்குடி இடையே அக்டோபர் 17 மற்றும் 21 -ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட நாள்களில் இரவு 10 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண்:06297) மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.

மறுமார்க்கத்தில், அக்டோபர் 18 மற்றும் 22 -ம் தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட நாள்களில் மதியம் 2 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண்:06298) மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (அக்.13) காலை 8 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகிறது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.