விழாவுக்கு தாமத​மாக வந்த ஷாகித் கபூர், டிப்தி திம்ரி: பாதியில் வெளி​யேறி​னார் நானா படேகர்

விழாவுக்கு தாமத​மாக வந்த ஷாகித் கபூர், டிப்தி திம்ரி: பாதியில் வெளி​யேறி​னார் நானா படேகர்

பிரபல இந்தி நடிக​ரான நானா படேகர், தமிழில் ‘பொம்மலாட்​டம்’, ரஜினி​யின் ‘காலா’ படங்​களில் நடித்துள்ளார். இவர் தற்​போது, ஷாகித் கபூர், டிப்தி திம்​ரி, அவினாஷ் திவாரி, ஃபரிதா ஜலால், ரன்​தீப் ஹூடா நடித்துள்ள ‘ஓ ரோமியோ’ என்ற இந்​திப் படத்​தில் நடித்துள்ளார்.

விஷால் பரத்​வாஜ் இயக்​கி​யுள்ள இப்​படம் பிப். 13-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது. இப்​படத்​தின் டிரெய்​லர் வெளியீட்டு விழா மும்​பை​யில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடை​பெற்றது. நிகழ்ச்சி 12 மணிக்​குத் தொடங்குவ​தாக அறிவிக்​கப்பட்டு இருந்​த​தால், சரி​யான நேரத்​துக்கு வந்​தார் நானா படேகர். ஆனால், படத்​தின் ஹீரோ ஷாகித் கபூரும், ஹீரோ​யின் டிப்தி திம்​ரி​யும் ஒரு மணி நேரம் தாமத​மாக வந்​தனர்.

இதனால் கோபமடைந்த நானா படேகர், நிகழ்ச்சியிலிருந்து கிளம்​பி​னார். படக்​குழு​வைச் சேர்ந்தவர்​கள் அவரை சமா​தானப்​படுத்த முயன்​றனர். ஆனால், தனது கைக்​கடி​காரத்​தைச் சுட்​டிக் காட்டி கோபமாக வெளியேறினார்.

பின்​னர் இயக்​குநர் விஷால் பரத்​வாஜ் பேசும்​போது, “நானும் நானா படேகரும் 27 ஆண்டு கால நண்​பர்​கள். இருந்​தா​லும் இப்​படத்​தில்​தான் முதல்​முறை​யாக இணைகிறோம். இந்த நிகழ்​விலிருந்து அவர் வெளியேறியது வருத்​தம் தரவில்​லை. காரணம், 1 மணிநேரம் வரை காத்​திருந்து பின் கிளம்​பிச் சென்​றது​தான் அவரின் ஸ்டைல். அது​தான் நானா படேகர்” என்​றார்.