JUST NOW: தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா
தவெகவில் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா இன்று இணைந்தார்.
விஜய்யின் தவெக கட்சியில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று சேர்ந்தார். இதையடுத்து அவரின் ஆதரவாளராக கருதப்படும் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா மற்றும் மேலும் 100-க்கும் மேற்பட்ட சில மூத்த அதிமுக நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்தனர்.
அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தவெக மூத்த தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.