நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா: 3-வது ஆட்டத்தில் அபிஷேக் அதிரடி!
நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை நியூஸிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து நாக்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா 3, ஹர்திக், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2, ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.