தவெகவில் இணையும் புதுச்சேரி அமைச்சர்?

தவெகவில் இணையும் புதுச்சேரி அமைச்சர்?

தவெகவில் புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார் விரைவில் இணையக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், அமைச்சர் ஜான்குமார் பெயரை குறிப்பிடாமல் சில கருத்துகளை தெரிவித்தார். அதாவது அமைச்சராக அவர் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆனபிறகும் இலாகா தரப்படவில்லை, இது சிறுபான்மையின மக்களுக்கு (கிறிஸ்தவர்கள்) எதிரானது என விமர்சித்தார்.

ஜான்குமார் பாஜகவில் இருக்கும் நிலையிலும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டினின் ஜேசிஎம் மன்றத்துடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதை சுட்டிக்காட்டி, அவருக்கு முதலமைச்சர் ரெங்கசாமி இலாகா தராமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி கூட்டத்தில் விஜய் இன்று பேச வேண்டியது ஏன் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. விஜய் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர். ஜான்குமாரும் கிறிஸ்தவர் என்பதால், அவரை தன்பக்கம் வரவழைக்கும் முயற்சியாகவே விஜய் இவ்வாறு பேசியிருப்பதாகவும், விரைவில் அவர் தவெகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.