புதிய கட்சித் தொடங்கினார் ஓபிஎஸ்

புதிய கட்சித் தொடங்கினார் ஓபிஎஸ்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு, கட்சியில் தொடர்ந்து உட்கட்சி மோதல் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் முக்கிய புள்ளியாக இருந்த செங்கோட்டையனும், விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டார். ஒருபக்கம் அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் ஒருசேர்க்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இருப்பினும் அதற்கு எடப்பாடி பழனிசாமி இடம் கொடுக்காமல் உறுதியாக உள்ளார். இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ல் அறிவிப்பதாக ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, கழகமாக மாற்றி புதிய கட்சியை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.