புதுச்சேரி: 10 நிமிடத்திற்கு முன்பே வந்த விஜய்
புதுச்சேரியில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் 10 நிமிடத்திற்கு முன்பே வந்தார்.
உப்பளம் துறைமுகம் பகுதியில் உள்ள மைதானத்தில் தவெக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே பாஸ் மூலம் போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.
அவர்கள் அனைவரும் மைதானத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இடம் காலியாக காணப்பட்டது. இதையடுத்து பாஸ் இல்லாதோருக்கும் அனுமதி அளிக்க போலீசாரிடம் தவெக நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஆனால் போலீசார் அதற்கு அனுமதி தரவில்லை.
இதனால் போலீசாருக்கும், தவெக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் நேரிட்டது. எனவே அங்கு பரபரப்பு நிலவியது. சில தொண்டர்கள் போலீசாரின் அனுமதியை மீறி, மைதானத்திற்குள் புகுந்தனர்.