தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்பு:  பிரதமர் மோடி உறுதி

இந்​தியா மேற்​கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்​தால் இந்​திய இளைஞர்​களுக்கு ஏராள​மான வாய்ப்​பு​கள் உரு​வாகும் என என்​சிசி மாணவர்​களிடம் பிரதமர் மோடி கூறினார்.

குடியரசு தின​விழா அணிவகுப்​பில் பங்​கேற்​ப​தற்​காக நாட்​டின் பல பகு​தி​களில் இருந்து என்​சிசி மாணவர்​கள் டெல்​லி​யில் முகாமிட்​டுள்​ளனர். இந்த முகாமை குடியரசுத் துணைத் தலை​வர் சி.பி.​ரா​தா கிருஷ்ணன் கடந்த 5ம் தேதி தொடங்கி வைத்​தார்.

குடியரசு தின​விழா அணிவகுப்பு முடிந்​ததும், என்​சிசி மாணவர்​கள் பங்​கேற்​கும் நிகழ்ச்​சிகளை பிரதமர் பார்​வை​யிடு​வது வழக்​கம். இந்​நிகழ்ச்சி டெல்லி கன்​டோன்​மன்ட் பகு​தி​யில் உள்ள கரியப்பா மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. இங்கு நேற்று சென்ற பிரதமர் மோடி என்​சிசி மாணவர்​களின் அணிவகுப்பை பார்​வை​யிட்​டார்.

இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: தன்னம்பிக்கையுடன் கூடிய இளைஞர்​கள் இருக்​கும் இயக்​கம் தேசிய மாணவர் படை. இந்த இயக்​கம் இளைஞர்​களை ஒழுக்​கம் மற்​றும் உணர்​வுள்ள குடிமக்​களை உரு​வாக்​கு​கிறது. என்​சிசி மாணவர்​கள் நாட்​டுக்​காக தங்​களை அர்ப்​பணிக்​கின்​றனர்.

ஒட்​டுமொத்த உலகமே, இளைஞர்​களை அதிக நம்​பிக்​கை​யுடன் பார்க்​கிறது. இந்​திய இளைஞர்​கள் ஜனநாயக கலாச்​சா​ரம், வேற்றுமை​யில் ஒற்​றுமையை மதிக்​கும் குணம், உலகை ஒரு குடும்​ப​மாக கருதும் பண்​பு​களை பெற்​றுள்​ளனர். இளைஞர்​களுக்கு அதிக பலன்​களை கிடைக்க மத்​திய அரசு முயற்சி மேற்கொண்டு வரு​கிறது.

இந்​தி​யா​வும் - ஐரோப்​பிய யூனியனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்​தில் கையெழுத்​திட்​டுள்​ளது. இதற்கு முன்பு ஓமன், நியூசிலாந்​து, இங்​கிலாந்​து, ஐக்​கிய அரபு எமிரேட்​ஸ், ஆஸ்​திரேலியா மற்​றும் மொரீசி​யஸ் ஆகிய நாடு​களு​டன் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தியா கையெழுத்​திட்​டுள்​ளது. இந்த ஒப்பந்​தங்​களால் நாட்​டில் உள்ள லட்​சக்​கணக்​கான இளைஞர்​களுக்கு எண்​ணில் அடங்கா வாய்ப்​பு​கள் உரு​வாக உள்​ளன. இவ்வாறு அவர் கூறி​னார்​.