மத்திய கிழக்கில் மோதல்கள், நிலையற்ற உலகளாவிய பொருளாதாரங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் தங்கத்திற்கான தேவை எப்போதும் இருக்கும். இந்த நிலையில் பண்டிகைகள் மற்றும் திருமண சீசன் நெருங்கி வருகிறது. இதன் காரணமாக, தங்கத்திற்கான தேவை அதிகமாக இருக்கிறது. முதலீடு மற்றும், பாதுகாப்பான புகலிடமான தங்கம் பார்க்கப்படுகிறது. இதனால் அதன் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, இந்தியா வெளிநாட்டிலிருந்து அதிக சதவீத தங்கத்தை இறக்குமதி செய்கிறது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்தை எட்டி வருகின்றது. மறுபுறம், வெள்ளியின் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தங்கத்தின் விலைகள் உலகளவில் உயர்ந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் 4% உயர்ந்த நிலையில், 2025 செப்டம்பர் தொடக்கத்தில் விலைகள் 6.7% அதிகரித்து அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் $3,750 ஆக உயர்ந்தன.
மத்திய கிழக்கில் மோதல்கள், நிலையற்ற உலகளாவிய பொருளாதாரங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 2018-19 ஆம் ஆண்டில் தங்க இறக்குமதிக்காக இந்தியா 32.9 பில்லியன் டாலர்களையும், 2021-22 ஆம் ஆண்டில் 46.2 பில்லியன் டாலர்களையும், 2023-24 ஆம் ஆண்டில் 45.5 பில்லியன் டாலர்களையும், 2024-25 ஆம் ஆண்டில் 58.0 பில்லியன் டாலர்களையும் செலவிட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இறக்குமதிகள் ஏற்கனவே $16.9 பில்லியனைத் தொட்டுள்ளன. இவ்வளவு பெரிய செலவு வர்த்தக சமநிலையை பாதிக்கிறது.
2024-25 ஆம் ஆண்டில், இந்தியா ரூ.1,255 கோடி மதிப்புள்ள 1.62 டன் மட்டுமே வெட்டி எடுத்தது. இதில் பெரும்பாலானவை கர்நாடகாவில் இருந்து வந்தவை. ஆனால் தங்கச் சுரங்கத் துறையில் விரைவில் ஒரு முக்கிய மாற்றம் வர உள்ளது. ஆந்திராவின் ஜோனகிரியில் ஆண்டுக்கு 750 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய ஒரு புதிய சுரங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. 2001 முதல் மூடப்பட்டிருக்கும் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல்களை (KGF) மீண்டும் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு, கழிவுக் கிடங்குகளில் இருந்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 750 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்படும். இதனால் தங்கம் விலை குறையலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த கால சுரங்கத்தில் இருந்து மீதமுள்ள கழிவுகளிலிருந்து தங்கம் பிரித்தெடுக்கப்படும். இந்த சிறிய துகள்களில் இன்னும் துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களும் தங்கமும் உள்ளன. இந்த மாற்றத்தை ஆதரிக்க தனியார் முதலீடு மற்றும் வெளிநாட்டு நிதிகளையும் அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.