டி20 உலகக் கோப்​பைக்கு முன்பு இந்தி​யா​விடம் இருந்து கற்​றுக்​ கொள்வோம்: நியூஸி. வீரர் மார்க் சாப்​மேன்

டி20 உலகக் கோப்​பைக்கு முன்பு இந்தி​யா​விடம் இருந்து கற்​றுக்​ கொள்வோம்: நியூஸி. வீரர் மார்க் சாப்​மேன்

நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக நேற்று முன்​தினம் குவாஹாட்​டி​யில் நடை​பெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்​டி​யில் 154 ரன்​கள் இலக்கை இந்​திய அணி 10 ஓவர்​களில் துரத்தி வெற்றி கண்டிருந்​தது. தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 20 பந்​துகளில், 68 ரன்​களை விளாசி மிரட்டி​னார்.

முன்​ன​தாக அவர், 14 பந்​துகளில் அரை சதம் அடித்திருந்தார். அபிஷேக் சர்​மாவுக்கு உறு​துணை​யாக விளை​யாடிய கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 26 பந்​துகளில் 56 ரன்​கள் விளாசி​னார். இந்த வெற்​றி​யின் மூலம் இந்​திய அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரை 3-0 என தன்​வசப்​படுத்​தி​யது. 4-வது போட்டி நாளை (28-ம் தேதி) விசாகப்பட்​டினத்​தில் நடை​பெறுகிறது.

இந்​நிலை​யில் குவாஹாட்டி போட்​டிக்கு பின்​னர் நியூஸிலாந்து அணி​யின் பேட்​ஸ்​மே​னான மார்க் சாப்​மேன் கூறியதாவது:

அபிஷேக் சர்​மா, சூர்​யகு​மார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் துடிப்​ப​ான​தாக​வும், ஆற்​றல் நிறைந்​த​தாக​வும் இருந்​தது. அபிஷேக் சர்மா நேரில் விளை​யாடு​வதை நான் அதி​கம் பார்த்​த​தில்​லை. ஆனால் அவரது சிக்​ஸர் அடிக்​கும் திறன் எதற்​கும் குறைந்தது இல்​லை.

அவரது அற்​புத​மான சிக்​ஸர் அடிக்​கும் திறமைக்கு பின்னால் ஆக்​ரோஷம் மட்​டுமல்ல, கூர்​மை​யான விளையாட்டு விழிப்​புணர்வு மற்​றும் திட்​ட​மிடலும் உள்ளன. தற்போதைய சூழ்​நிலை​யில் அபிஷேக் சர்மா சிறந்த கிரிக்கெட்டை விளை​யாடி வரு​கிறார். இது​தான் டி 20 கிரிக்கெட்​டின் இயல்​பு. சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்தி வரும் வீரரை கட்​டுப்​படுத்​து​வது கடினம். பேட்​டிங், பந்​து​வீச்​சு, பீல்​டிங் என 3 துறை​யிலும் நாங்​கள் முன்னேற்றம் காணவேண்​டும்.

பெரிய அளவில் நாங்​கள் ரன்கள் குவிக்க பார்க்க வேண்டும். ஆடு​களங்​கள் சிறப்​பாகவே உள்​ளன. எனினும் இந்​தி​யா​வில் உள்ள அனைத்து ஆடு​களங்​களும் ரன்குவிப்புக்கு சாதக​மாக இருக்​காது என்​ப​தை​யும் அறிவோம்.

சில நேரங்​களில் ஆடு​களங்​களில் பந்​துகள் நன்கு சுழலும். இதனால் எல்​லா​வற்​றுக்​கும் நாங்​கள் தயா​ராகவே உள்ளோம். தற்போது உலகின் சிறந்த அணிக்கு எதி​ராக விளை​யாடி வரு​கிறோம். இதை​விட டி 20 உலகக் கோப்பை தொடருக்கு சிறப்​பான முறை​யில் தயா​ராக முடி​யாது. இந்த தொடரில் அவர்​களிடம் இருந்து நாங்​கள் ஒன்று அல்லது இரண்டு விஷ​யங்​களை கற்​றுக்​கொள்​வோம் என்ற நம்​பிக்கை உள்​ளது. இவ்​வாறு மார்க்​ சாப்மேன் கூறினார்.