தெ.ஆப்பிரிக்க டி20 தொடருக்கு சுப்மன் கில் ரெடி... காம்பீர் பேட்டி

தெ.ஆப்பிரிக்க டி20 தொடருக்கு சுப்மன் கில் ரெடி... காம்பீர் பேட்டி

தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட சுப்மன் கில் தயாராகவும், ஆர்வமாகவும் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கில் சிகிச்சை எடுத்தார். பின்னர் ஓய்வெடுத்து வருவதால், ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரிலும் கில் விளையாடவில்லை. எனினும், டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.

காயத்தால் அவர் விளையாடுவாரா, மாட்டாரா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள  பயிற்சியாளர் கவுதம் காம்பீர், "கில் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார். தற்போது அவர் முழு உடல்நலத்துடனும் பிட்டாக உள்ளார். டி20 தொடரில் விளையாடத் தயாராக உள்ளார். அதனால்தான் தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணிக்கு அவரை தேர்வு செய்தோம்" என்று தெரிவித்தார். 

தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி விவரம்:

சூரியகுமார் யாதவ் (கேப்டன்), கில் (துணை கேப்டன்), அபிசேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஸ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, வாசிங்டன் சுந்தர்.