திடீரென பற்றி எரிந்த அரசு பேருந்து – அலறியடித்து ஓடிய பயணிகள்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திடீரென அரசு பேருந்து தீ பற்றி எரிந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.
குமுளியில் இருந்து திண்டுக்கல் வழியாக திருப்பூர் சோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்து அங்கிருந்து திருப்பூருக்கு செல்வதற்கு பேருந்து பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென பேருந்து இன்ஜினில் இருந்து கரும்புகை ஏற்பட்டு பேருந்தை சூழ்ந்து கொண்டதுடன் தீ பற்றியது.
இதனால் பதறியடித்த பயனிகள் பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடினர். அப்போது அங்கு வாகனத்தில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து பற்றி எரிந்த பேருந்தின் மீது ஊற்றி அப்பகுதியில் இருந்தவர்கள் அனைத்தனர். பேருந்து பற்றி எரிந்ததால் திடுக்கிட்ட பொதுமக்கள், தரமில்லாத பேருந்துகளை அரசு இயக்குவதாகவும், மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு தரமற்ற பேருந்துகள் இயக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.