நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்
டெலாய்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ந்தது.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சி 6.7 முதல் 6.9 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெலாய்ட்டின் முந்தைய கணிப்பை விட இது 0.3 சதவீதம் அதிகம்.
தேவை மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் வளர்ச்சி சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டிலும் இதேபோன்ற வளர்ச்சி தொடரவே அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு டெலாய்ட் தெரிவித்துள்ளது.