ரூல்ஸ் மீறிய அமேசான், ஃபிளிப்கார்ட் – ரூ.40 அபராதம் போட்ட அரசு

ரூல்ஸ் மீறிய அமேசான், ஃபிளிப்கார்ட் – ரூ.40 அபராதம் போட்ட அரசு

சட்டவிரோதமான விற்பனையில் செய்ததால் மீஷோ, மெட்டா, அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வரை மத்திய அரசு அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ன் படி அங்கீகரிக்கப்படாத பொருட்களை விற்றதாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகளை விற்றதாக மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

அதாவது ஆன்லைனில் பொருட்களை விற்கும் ஜியோமார்ட், சிமியா, டாக் ப்ரோ, மீரோ, டிரேட் இந்தியா, இந்தியா மார்ட், மெட்டா, ஃபிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட 13 ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவை தங்களின் வணிக தளங்கள் மூலம் அங்கீகரிக்கப்படாத சுமார் 16,970க்கும் மேற்பட்ட பொருட்களை விற்றது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அங்கீகரிக்கப்படாமல் விற்பனை செய்யப்பட்ட பொருட்கல் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிகப்பட்டு வருகிறது. அதன்படி, மீஷோ, மெட்டா, ஃபிளிப்காட், அமேசான் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், ஜியோமார்ட், சிமியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.