வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட்- இஸ்ரோ நாராயணன் பெருமிதம்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட்- இஸ்ரோ நாராயணன் பெருமிதம்!

ராக்கெட் திரஸ்டர்களைக் கொண்டு நிற்கும் இடத்தில் இருந்தே விமானங்களை மேலெழுப்பும் சோதனையில் சென்னை ஐஐடி முன்னேற்றம் கண்டுள்ளது.

ஸ்பேஸ்-எக்ஸ் போன்ற நிறுவனங்கள், விண்வெளியில் செயற்கைக்கோள்களை செலுத்தும் ராக்கெட்டுகளை திரும்பி பூமிக்கே கொண்டு வரும் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இது பல வகையிலான கண்டுபிடிப்புகளுக்கு தொடக்க புள்ளியாக இருக்கிறது.

சிறிய ரக ட்ரோன்கள் செயல்படும் விதத்தில் இருந்து ஈர்க்கப்பட்ட கண்டுபிடிப்பாக இவை உள்ளன. இந்த முறையினால், சாதாரண சிறிய ரக விமானங்களை கூட நம்மால் ட்ரோன்களை போன்று இயக்க முடியும். இது தொடர்பான ஆய்வுகளை தான் சென்னை ஐஐடி மேற்கொண்டு வருகிறது.

வருங்காலத்தில், ராணுவம், அவசர கால உதவிகள், ஏர் டேக்சி சேவை போன்ற துறைகளுக்கு இந்த சேதனைகள் உதவியாக இருக்கும். தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் சோதனை வெர்டிகல் டேக் ஆஃப் அண்டு லேண்டிங் (VTOL) விமானம் என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக ராக்கெட்டுகளை செங்குத்தாக மேலெழுப்ப திரஸ்டர்கள் உதவியாக இருக்கிறது. இந்த முறையை செயல்படுத்த ஹைபிரிட் ராக்கெட்டுகளில் திட எரிபொருளுடன் திரவ ஆக்சிஜனேற்றி (combining solid fuel and a liquid oxidizer) பயன்படுத்தப்படும். ஆனால், சிறிய ரக விமானங்களை மேலெழுப்ப சென்னை ஐஐடி நடத்திய சோதனையில், திரஸ்டர் இயக்கத்திற்காக திட எரிபொருளுடன், அழுத்தப்பட்ட காற்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்புகள் உபயோகத்தில் இருக்கும் திரவ எரிபொருள் ராக்கெட்டை விட பாதுகாப்பானதாகவும், மலிவானதாகவும் பார்க்கப்படுகிறது.

ஹைபிரிட் ராக்கெட் திரஸ்டர் சோதனை

இந்த சோதனையை சென்னை ஐஐடி நேரடியாக ஒரு மாதிரியை உருவாக்கி செய்யவில்லை. அதற்கு பதிலாக, ஒரு ஹார்டுவேரை உருவாக்கி, அதை புவியின் சூழல் அமைப்பில் செலுத்துவது போன்ற இயக்கத்தை கணினியில் செயல்படுத்தி இந்த சோதனையை சென்னை ஐஐடி செய்து முடித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, ஒரு மாதிரி உருவாக்கப்பட்டு இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலெழும்பும் விமானம், பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் பிஐடி கண்ட்ரோலரும் அதில் பொருத்தப்பட்டுள்ளது. இது நாம் அன்றாடம் காணும் ட்ரோன்களில் இருக்கும் ஒரு கருவியாகும்.

ஒரு ட்ரோன் செங்குத்தாக மேலெழும்பி, தரையிறங்க கீழே வரும்போது, அதன் உடலை சரியான ஈர்ப்பு விசையில் செலுத்த, பிஐடி கண்ட்ரோலர் உதவுகிறது. மேலும், ஒரு வேகக் கண்காணிப்பு அம்சமும் இதில் நிறுவப்பட்டுள்ளது. இது விமானம் கீழே வரும்போது, அதன் வேகத்தை தேவையான அளவிற்கு மாற்றும் திறன்கொண்டதாக அமைக்கப்படும்.

சென்னை ஐஐடி செய்துமுடித்துள்ள இந்த சோதனையின் வாயிலாக, ஏர் டேக்சி போன்ற சேவைகள் விரைவில் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.