33 பந்துகளில் சதம்... கலக்கிய இசான் கிஷன்

33 பந்துகளில் சதம்... கலக்கிய இசான் கிஷன்
இசான் கிஷன்

கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் ஜார்க்கண்ட் வீரர் இசான் கிஷன் 33 பந்துகளில் சதம் அடித்து கலக்கியுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான லீக் போட்டியில், கர்நாடகாவும், ஜார்க்கண்டும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 412 ரன்களை சேர்த்தது.

அந்த அணி வீரர் இசான் கிஷன் 33 பந்துகளில் சதம் அடித்து கலக்கினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், 125 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் மொத்தம் 39 பந்துகளை எதிர்கொண்டு இந்த ரன்களை விளாசினார். இதில் 14 சிக்சர்கள், 7 பவுண்டரிகளும் அடங்கும்.

டி20 உலக கோப்பையில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு இசான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் அதிரடியாக சதம் விளாசியிருப்பது இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.