முதல் போட்டியிலேயே விராட் கோலி சதம்... டெல்லி வெற்றி

முதல் போட்டியிலேயே விராட் கோலி சதம்... டெல்லி வெற்றி

ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் கோலி உள்ளிட்டோரின் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லியில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில், ஆந்திராவும், டெல்லி அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. முதலில் பேட் செய்த ஆந்திர அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்களை எடுத்தது. ஆந்திர அணி வீரர் ரிக்கி புய் 122 ரன்கள்  விளாசினார்.

இதன்பின்னர் 299 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி அணி விளையாடியது. பிரியான்ஸ் ஆர்யா 74, விராட் கோலி 131, நிதிஸ் ராணா 77 ரன்களை விளாசினர்.

இதனால், போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 

சச்சின் சாதனை முறியடிப்பு: முதல் தரக் கிரிக்கெட்டில் மிக குறைந்த போட்டிகளில் 16,000 ரன்களை கடந்து, சச்சின் ஏற்கெனவே படைத்த சாதனையை கோலி இப்போட்டியில் முறியடித்தார்.