ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் 2025: சாம்பியன் பட்டம் வென்று லக்ஷயா சென் சாதனை!
: யுஷி தனகாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-15, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் மற்றும் ஜப்பானின் யுஷி தனகா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு வீரர்களும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் செட்டை யார் கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. அந்தவகையில் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென் 21-15 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றார்.
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் லக்ஷ்யா சென் 21-15, 21-11 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் யுஷி தனகாவை வீழ்த்தியதுடன், நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம் இந்த பட்டத்தை வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன் ஆடவர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த கடந்த 2017ஆம் ஆண்டிலும், மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 2014 மற்றும் 2016 என இரண்டு முறையும் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.