ரன் வேட்டையை தொடங்கினார் சூரியகுமார் யாதவ்! 15 மாதங்களுக்கு பிறகு அதிரடி ஆட்டம்!
15 மாதங்களுக்கு பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டி20 அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் அசத்தியுள்ளார்.
2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ், 35 பந்துகளில் 75 ரன்களை விளாசியிருந்தார். அதன்பிறகு அவர் அரைசதமோ, சதமோ அடிக்காமல் இருந்தார். இதனால் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக 37 பந்துகளில் 82 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய கிரிக்கெட் அணி போட்டியில் எளிதில் வென்று அசத்தியது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் சில வாரமே உள்ளது. இந்நிலையில் சூரியகுமார் யாதவ் நல்ல பார்முக்கு திரும்பியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.