அதிவேகமாக 5,000 ரன்கள்! ரஸல்லின் உலக சாதனையை முறியடித்த அபிசேக்!
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்து இந்திய அணி வீரர் அபிசேக் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அவர், 35 பந்துகளை எதிர்கொண்டு 85 ரன்களை விளாசினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக அவர் 5,000 ரன்களை கடந்தார். இதற்கு அவர், 2,898 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டுள்ளார்.
இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஸல் 2,942 பந்துகளில் 5,000 ரன்களை கடந்ததே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அபிசேக் சர்மா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.