அழுத்தமான சூழலில் விளையாடிய அனுபவம் என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது” - ஷிவம் துபே

அழுத்தமான சூழலில் விளையாடிய அனுபவம் என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது” - ஷிவம் துபே

ஆட்டத்தின் அழுத்தமான சூழலில் விளையாடிய அனுபவம் என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து அணி உடனான 4-வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 23 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இருப்பினும் அவரது ஆட்டம் கவனம் பெற செய்தது.

“இது நான் செலுத்தும் கடின உழைப்பின் அடையாளம். அழுத்தம் மிக்க சூழலில் அதிகம் விளையாடிய அனுபவம் எனது மைண்ட் செட்டை சிறந்த முறையில் மேம்பட செய்கிறது. அதனால் ஆட்டத்தில் என்ன நடக்க போகிறது என்பது எனக்கு தெரியும். பந்து வீச்சாளர் எனக்கு எப்படி பந்து வீசுவார் என்றும் நான் அறிவேன்.

அதுதான் பேட்டிங் மற்றும் பவுலிங் என என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது என நான் கருதுகிறேன். பந்துவீச்சில் நாம் கவனம் செலுத்தி வருகிறேன். அதற்காக கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து வீரர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். நானும் அப்படித்தான். ஒவ்வொரு ஆட்டத்திலும் என்னை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். வலைப்பயிற்சியில் கடினமாக பயிற்சி செய்வது ஒரு வகை என்றால், களத்தில் அதை செயல்படுத்துவது வேறு வகை.

நான் சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமல்ல வேகப்பந்து வீச்சாளர்களையும் அடித்து ஆட முயற்சி செய்வேன். அதில் நான் தெளிவாக உள்ளேன். எப்போது அதிரடியாக விளையாட வேண்டும், தடுப்பாட்டம் ஆட வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்” என ஷிவம் துபே தெரிவித்தார்.